கற்றாழையின் பயன்கள் / Benefits of Aloe Vera

 கற்றாழை  ஒரு அதிசய தாவரமாக  கருதப்படுகிறது. நாம் உடலின் உள்ளே உணவாகவும் வெளியே கிரீமாகவும் பயன்படுத்தலாம். அரிய பயனுள்ள தாவரங்களில் ஒன்றாகும்.  இந்த அற்புதமான கற்றாழை பண்டைய அமெரிக்க மருத்துவத்தின் பிரதானமாக இருந்தது. மேலும் இன்றும் இது பயன்படுத்தப்படுகிறது .
பல்வேறு உடல்நலக் கோளாறுகளை குணப்படுத்தி பல  உயிர்களைக் காப்பாற்றப் பயன்படுகிறது. மனிதகுலத்திற்கு தொடர்ந்து உதவும் நித்திய இயற்கை வைத்தியங்களில் இதுவும் ஒன்றாகும். கற்றாழை தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் மற்றும் பிற நோய்த்தொற்று கிருமிகளுடன் போராடி பரவுவதை நிறுத்த உதவுகிறது மற்றும் தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க உதவுகிறது.

நோயெதிர்ப்பு சத்தியை அதிகரிக்கவும்

ஆன்டிஆக்ஸிடன்கள்(Antioxidants ) ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. அவை உங்கள் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம்  நோயெதிர்ப்பு சத்தியை அதிகரிக்கின்றன . கற்றாழையில் ஆன்டி-ஆக்ஸிடன்கள் அதிகம் உள்ளது. இது பிரீ ரடிகளினால்(free radicals ) உண்டாகும் பாதிப்புகளை தடுக்கிறது. நீங்கள் தொடச்சியாக ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்(Antioxidants )   பாவிப்பீர்களானால் அது உங்களுக்கு ஒரு செழிப்பான நோயற்ற எதிர்காலத்தை உருவாக்கும்.

சிறந்த தோல் ஆரோக்கியம்

இது தோலுக்கு சத்து அளித்து தோலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இது வயது முதிரிவினால் தோலில் உண்டாகும் சுருக்கத்தை தாமதமாக நிகழ செய்யும்.  அதனால் தான் முகத்துக்கு பூசும் கிரீமில் கற்றாழை சேர்க்கப்படுகிறது.

சூரிய ஒளியினால் உண்டாகும் sun burnனை இது சுகப்படுத்துகிறது. ஒவ்வாமை, பூச்சி கடித்தல் மற்றும் வீக்கம் ஆகியவற் இது சுகப்படுத்துகிறது

உடல் நிறையை சீராக்கும் அத்துடன் சத்தியை கொடுக்கும் 

கற்றாழை சமிபாட்டு தொகுதியை சுத்தப்படுத்துகிறது. அற்புதமான சுத்திகரிப்பு மற்றும் ஈரப்பதமூட்டும் திறன்களைக் கொண்டுள்ளது. இது எந்த செரிமான பிரச்சனையையும் தீர்த்து குடலை சுத்தப்படுத்துகிறது. குடலில் ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்தால் ஊட்டச்சத்துக்களை குடல் பிரச்சனை இல்லாமல் உறிஞ்சும் . உங்களது உடல் இடை கூடாது, சில நாட்களில் நீங்கள் உடல் நிறை குறைவதை அவதானிப்பீர்கள் .

பல உணவுப் பொருட்கள் எங்களுக்கு சோர்வை உண்டாக்கி சத்து இல்லாமல் மயக்கம் வருவது போல் நிலைமையை உருவாக்கும். ஆனால் கற்றாழை அதை நீக்கி எங்களுக்கு சத்தியை கொடுக்கும் 

கொலஸ்ட்ராலை குறைக்கிறது

உங்கள் உணவில் கற்றாழை  சேர்க்கலாம் அல்லது  கற்றாழை சாறு குடிக்கலாம். மூலிகையில் உள்ள தாதுக்கள் மற்றும் பொருட்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். கற்றாழையை உட்கொள்பவர்கள் 30% குறைவான கொலஸ்ட்ரால் உற்பத்தி செய்வதாக ஒரு புரட்சிகர ஆய்வு காட்டுகிறது. இது கிட்டத்தட்ட  இருதய பிரச்சனைகளை குறைக்கிறது . கற்றாழையை அடிப்படையாகக் கொண்ட பல  மருந்துகள் உள்ளன. உங்கள் இருதயநோய் நிபுணரை அணுகி சிறந்த தீர்வைப் பற்றி கேளுங்கள். 


இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது

உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் கற்றாழை பிரச்சனைகளை குறைக்கிறது. பல ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்துள்ளார்கள். கற்றாழை சாறு அல்லது கற்றாழை ஜெல் உங்கள் இரத்த சர்க்கரையின் அளவை  சராசரி எண்ணிக்கையில் இருக்க உதவுகின்றன. இது ட்ரைகிளிசரைடுகளை(Triglyceride) குறைக்கிறது. சில பரிசோதனை மருந்துகளில் கற்றாழை பண்படுத்த படுகிறது .

இந்த மருந்துகளை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயை முழுமையாக குணப்படுத்த முடியும். நீரிழிவு நோயால் உங்கள் கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை இருந்தால், நீங்கள் எப்போதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கற்றாழை ஜெல்லை  உபயோகிக்கலாம். 

பல்லீறு (Gum Disease) நோய்க்கு குட்பை சொல்லுங்கள்

கற்றாழை செல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது உடலில்  பொதுவான மீளுருவாக்கம் செய்ய உதவுகிறது.  பல்லீறுகள் உடலின் மிகவும் உணர்திறன் வாய்ந்த பாகங்களில் ஒன்றாகும். பெரும்பாலான மக்கள் பல்லீறு நோயை எதிர்த்துப் போராடுகிறார்கள். மற்றும் பல்வீக்கம் பற்களை விழச் செய்யலாம். இது அதிக சுகாதார கேடுகளை உருவாக்குகிறது.

சோற்றுக்கற்றாழையால் அதற்கெல்லாம் தீர்வு காண முடியும்,  கற்றாழை ஜெல் அல்லது கற்றாழை தூளை உங்கள் பல் ஈறுகளில் மசாஜ் செய்யவும். இது கிருமிகளை கொல்கிறது.

இனி மூட்டு வலி இல்லை

நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக இருந்தால், மூட்டுகளில் ஏற்படும் அழற்சியானது உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கக்கூடிய ஒன்று.  மற்றும் வயதான காலத்தில் மூட்டுவலி உருவாகிறது. கற்றாழை இவற்றில் இருந்து விடுபட உதவுகிறது.

கற்றாழை சாறு குடிப்பதும் மற்றும் அதன் ஜெல் பயன்படுத்துவதும் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரும் . இது உங்கள் மூட்டுகள் மீண்டும் பாதையில் செல்ல உதவுகிறது மற்றும் சிறந்த ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவுகிறது. இதன் பலன் கிடைக்க  சிறிது காலம்  எடுக்கும் ஆனால் மூட்டு வலியை குணப்படுத்த கூடியது. 

முகப்பருவை சுகப்படுத்துகிறது 

கற்றாழை தோலுக்கு பயன் படுத்தும் கிரீம்களில்(cream)  பயன்படுத்த படுகிறது. மேலும் அதன் மந்திர வைத்தியம் கட்டுக்கதை அல்ல.  உங்கள் முகத்தில் செபாசியஸ் சுரப்பிகள் (sebaceous glands) அதிகப்படியான எண்ணெயை உற்பத்தி செய்தால், அதை சரி செய்ய நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும். இறந்த சருமம் மற்றும் அழுக்குகளுடன் எண்ணெய் கலப்பதைத் தடுக்கலாம். கற்றாழை துளைகளை உடனடியாக சுத்தம் செய்கிறது. இதை  ஒரு நாளைக்கு இரண்டு முறை உங்கள் முகத்தில் தடவுவதன் மூலம்  பலனை பெறலாம் . இந்த பயனுள்ள மூலிகை மூலம் உங்கள் முகவடுக்கள் மற்றும் முகம் சிவப்பது போன்றவற்றிக்கு  சிகிச்சையளிக்கலாம்.

மென்மையான மற்றும் பளபளப்பான தலைமுடிக்கு ஒரு வழி

கற்றாழை மென்மையாக்கும் மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டிருப்பதால், கற்றாழை உங்கள் தலைமுடியை செழிப்பாகவும்  மிருதுவாகவும் வைத்திருக்கும். இது ஒரு தனித்துவமான பிரகாசத்தை வழங்குகிறது. இது முடியின் pH சமநிலையை பராமரித்து, முடியை வலுவாக்கும்.  கற்றாழை ஜெல்லையும்   எலுமிச்சை சாற்றையும் கலந்து தலை முடியில் பூசலாம். 

மலச்சிக்கலுக்கு முற்றுப்புள்ளி

 நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது.  கற்றாழையில் நார்ச்சத்து இருப்பதால் இயற்கையான மலமிளக்கியாகும். இது செரிமான செயல்முறையை விரைவுபடுத்துகிறது.

கற்றாழை சாறு எடுத்து, நாள் முழுவதும் மிதமான அளவுகளில் குடிப்பது சிறந்ததாகும். கற்றாழை ஒரு சிக்கலான அமைப்பைக் கொண்டிருப்பதால், அது சரியாக வேலை செய்ய பத்து மணிநேரம் ஆகலாம். 

Comments :

Post a Comment