கற்றாழை ஒரு அதிசய தாவரமாக கருதப்படுகிறது. நாம் உடலின் உள்ளே உணவாகவும் வெளியே கிரீமாகவும் பயன்படுத்தலாம். அரிய பயனுள்ள தாவரங்களில் ஒன்றாகும். இந்த அற்புதமான கற்றாழை பண்டைய அமெரிக்க மருத்துவத்தின் பிரதானமாக இருந்தது. மேலும் இன்றும் இது பயன்படுத்தப்படுகிறது . பல்வேறு உடல்நலக் கோளாறுகளை குணப்படுத்தி பல உயிர்களைக் காப்பாற்றப் பயன்படுகிறது. மனிதகுலத்திற்கு தொடர்ந்து உதவும் நித்திய இயற்கை வைத்தியங்களில் இதுவும் ஒன்றாகும். கற்றாழை தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் மற்றும் பிற நோய்த்தொற்று கிருமிகளுடன் போராடி பரவுவதை நிறுத்த உதவுகிறது மற்றும் தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க உதவுகிறது. நோயெதிர்ப்பு சத்தியை அதிகரிக்கவும் ஆன்டிஆக்ஸிடன்கள்( Antioxidants ) ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. அவை உங்கள் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு சத்தியை அதிகரிக்கின்றன . கற்றாழையில் ஆன்டி-ஆக்ஸிடன்கள் அதிகம் உள்ளது. இது பிரீ ரடிகளினால்( free radicals ) உண்டாகும் பாதிப்புகளை தடுக்கிறது. நீங்கள் தொடச்சியாக ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்( A...